மேம்படுத்தப்பட்ட நீலாம் திட்டம்
2017
கடந்த 16.3.2017ல் சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளியில் மேம்படுத்தப்பட்ட நீலாம் திட்டம்
(NILAM DITAMBAH BAIK) அறிமுகவிழாவின் வழி தொடக்கம் கண்டது. 1999ல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட நீலம் திட்டம் இவ்வாண்டு மேம்படுத்தப்பட்டதாக தலைமையாசிரியர் திரு.கா.சண்முகம் தெரிவித்தார். இம்மேம்படுத்தப்பட்ட நீலாம் திட்டத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். குறிப்பாக இப்புதியத் திட்டத்தில் பாலர் பள்ளி மாணவர்களும் இணைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்புதியத் திட்டத்தில் மாணவர்கள் புத்தகங்களைத் தவிர்த்து, நாளிதழ், சஞ்சிகை, சுவரொட்டி, துணுக்குகள், அட்டவணை, மின்னியல் புத்தகங்கள், வலைப்பதிவுகள், வழிகாட்டிக் குறிப்புகள் போன்றவற்றையும் வாசித்துத் தங்கள் குறிப்பேட்டில் பதிந்துகொள்ளலாம் என்பது சிறப்பு. நீலாம் குறிப்புப் புத்தகமும் மாற்றம் கண்டுள்ளதாகத் தெரிவித்தார். மேம்படுத்தப்பட்ட இத்திட்டம் வரும் ஏப்ரல் மாதம் அமுலுக்கு வருவதாக தலைமையாசிரியர் தெரிபவித்தார். மாணவர்களுக்குத் இத்திட்டத்தின் கீழ்க்கொடுக்கப்படும் அங்கீகாரமும் மாற்றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை மாணவர்களிடையே மேலும் வளர்ப்பதற்கு பள்ளியில் பல ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகம் கண்டுள்ளதாக தலைமையாசிரியர் கூறினார். தற்போது பள்ளி நூலகத்தில் ஒரு மாணவருக்கு 27 புத்தகங்கள் என்ற அடிப்படையில் சுமார் 4000 புத்தகங்கள் வைக்கப்படுள்ளதாகக் கூறினார்.
முன்னதாக கடந்த 23.2.2017ல் சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா இயக்குநனர் தொடக்கி வைத்த (HAN1S) நிகழ்ச்சியை சிம்பாங் மோரிப் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் யூடியுப் (Youtub) வழி நேரடி ஒலி,ஒளிபரப்பைக் கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இம்முறை இந்நீலம் திட்டம் பல சிறப்பம்சங்களுடன் பள்ளியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கம்போங் மோரிப் நூல்நிலைய அதிகாரிகள் அறுவரும் பிலிங் புத்தக நிறுவன அதிகாரிகளும் கலந்துகொண்டு மேலும் மெருகூட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமையாசிரியர் திரு.கா.சண்முகம் உரையாற்றி இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பிலிங் புத்தக நிறுவனத்தின் மாஸ்கோட் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பிலிங் புத்தக நிறுவனம் புத்தகக்கண்காட்சியை நடத்தியதுடன் புத்தக விற்பனையையும் மேற்கொண்டது. இந்நிறுவனம் பள்ளி நூல் நிலையத்திற்குப் புத்தகங்களையும் அன்பளிப்பு செய்ததது குறிப்பிடத்தக்கது.
கம்போங் மோரிப் நூல்நிலைய அதிகாரிகள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பல சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி இந்நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்தனர். நிகழ்ச்சியின் இறுதியில் கம்போங் மோரிப் நூல்நிலையத்தின் சார்பில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டது. காலை மணி 8:00 க்குத் தொடங்கிய இவ்வறிமுக நிகழ்ச்சி நண்பகல் 1 மணிக்கு இனிதே முடிவுற்றது.
No comments:
Post a Comment
Your comments are welcome/உங்களுடைய கருத்துகளை வரவேற்கிறோம்.